கடனிலிருந்து விடுபடுவது எப்படி? – எனது அனுபவம்
கடனில் சிக்கிக்கொள்வது யாருக்கும் பிடிக்காது. ஆனால் நான் நேரில் சந்தித்த ஒரு அனுபவம், இந்தப் பதிவை எழுத வைக்கிற காரணம்.
கிராமத்தில் வளர்ந்த நான், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் வட்டி கடன்களில் மாட்டிக்கொண்டேன், ஒருமுறை 1 லட்சம் 2 ரூபாய் வட்டியில் வாங்கினேன், ஆனால் 3 ஆண்டுகள் சென்றும் அசல் குறையவில்லை. சிறு கடன் பெரிய சுமையாக வந்தது.
வட்டி மட்டும் கொடுத்து அசல் அப்படியே இருந்தது. ஒரு கட்டத்தில் இது இப்படியேதான் வளர்ந்து வரும் என்று புரிந்தது. அப்போது நான் முயன்ற சில வழிகள்… அதுவே என்னை கடனிலிருந்து வெளியே எடுத்து வந்தது.
1. முதலில் ஒரு தெளிவான Budget செய்தேன் (Work out a budget)
என் முதல் தவறு என்ன?
என்னிடம் வரும் பணமும், போகும் செலவுகளும் என்ன என்று கூட சரியாக எழுதிப் பார்த்ததில்லை.
நான் செய்தது:
- மாத வருமானம்
- கட்டாய செலவுகள்
- தேவையில்லாத செலவுகள்
இவை மூன்றையும் தனியா எழுதினேன், இதனால் வந்தது பெரும்பாலான பணம் “சின்ன சின்ன வீண் செலவுகளுக்கு” போகிறது
Budget எழுதுவது தான் கடன் பிரச்சனையை சரி செய்வதில் முதல் படி.
2. அதிக வட்டி கடன்களை முதலில் முடித்தேன் (Priority Debts First)
கிராமங்களில் வரும் "2 ரூபா, 3 ரூபா மாத வட்டி" கடன்கள் தான் பெரிய விஷம். அசல் தொகை அப்படியே இருக்கும், வட்டி மட்டும் மாதம் மாதம் கொடுப்போம், முடிவில் நாமே முடங்கி போவோம்.
எனக்கு இருந்த எல்லா கடன்களையும் பட்டியலிட்டுப் பார்த்தேன். அதில் உயர்ந்த வட்டி இருந்தவற்றை முதலில் முடிக்கப் பிளான் போட்டேன்.
3. கடன்களை ஒன்றாக சேர்த்து ஒரு குறைந்த வட்டி கடனாக மாற்றினேன் (Consolidate / Refinance)
எனக்கு பல இடங்களில் கடன் இருந்தது – சில்லறை கடன்கள், மாத வட்டி, நண்பர்கள், சிறு finance… அவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரே குறைந்த வட்டியில் ஒரு small personal loan எடுத்தேன்.
இதனால்:
- ஒரே EMI
- குறைந்த வட்டி
- மன அழுத்தம் குறைவு
இது எனக்கு மிக பெரிய மாற்றம்.
4. தேவையற்ற செலவுகளை நிறுத்தினேன் (Reduce Unnecessary Spending)
கடனிலிருந்து வெளியே வர, சோகமாக இருந்தாலும் சில பழக்கங்களை நிறுத்த வேண்டி வந்தது:
- வெளியில் சாப்பிடுவது
- தேவையில்லாத online shopping
- unnecessary recharge packs
- சின்ன சின்ன ஆடம்பர செலவுகள்
இவற்றைக் கத்துக்கொள்ள நான் 3 மாதம் எடுத்தேன்.
5. என்னால் முடிந்த அளவுக்கு வருமானத்தை அதிகப்படுத்தினேன் (Boost Your Revenue)
கடனை குறைக்க இரண்டு வழி மட்டுமே:
- செலவைக் குறை
- வருமானம் அதிகப்படுத்து
நான் செய்தது:
- freelance வேலை
- part-time online வேலை
- Photoshop/Lightroom editing
- சிறு youtube content
சிறிய வருமானமாக இருந்தாலும், கடனை முடிக்க பெரிய உதவி.
6. பணம் வரவேண்டியவர்கள் Late செய்தால் உடனே Follow Up (Manage Cashflow)
நான் கொடுத்த பணம், அல்லது செய்யும் வேலைகளின் payment தாமதமாகிவிட்டால், “அவர்களே கொடுப்பார்கள்” என்று காத்திருக்காமல், அடுத்தவாரம், அடுத்தநாள் follow up செய்தேன்.
இதனால் cashflow என்னிடம் தொடர்ந்தது. இது மிக முக்கியம்.
7. மன அழுத்தத்தை கையாள கற்றுக்கொண்டேன் (Consider Emotional Wellbeing)
கடன் சுமை என்றால்:
- பதட்டம்
- மன அழுத்தம்
- பயம்
- உறங்க முடியாமை
இவை எல்லாம் வரும்.
- நான் தினமும் 10 நிமிடம் அமைதியாக உட்கார்வது,
- 2 நிமிடம் deep breath செய்வது,
- என் பிளான் எழுதுவது
இவை எல்லாம் mental stress குறைக்க உதவின.
8. இனிமேல் உயர்ந்த வட்டி கடன் எடுப்பது நிறுத்திக்கொண்டேன் (Avoid High Interest & Local Loans)
கிராமத்தில் “இது urgent… நாளைக்கு செட்டில் பண்ணிக்கலாம்…” என்று local lender loan எடுத்தால், அது வாழ்க்கையே தள்ளாடும் இடத்துக்கு கொண்டு போய்விடும்.
நான் எடுத்த முடிவு:
❌ 2 ரூபாய் வட்டி
❌ 3 ரூபாய் வட்டி
❌ அதிக வட்டி hand loan
❌ தினக்கட்டி loan
Bank loan மட்டுமே & Legal & low interest loan மட்டும்
அது தான் உயிரை காப்பாற்றும்.
9. கடன் கொடுத்தவர்கள் நியாயமாக நடக்கிறார்களா கவனித்தேன் (Fair Treatment from Lenders)
சிலர் extra வட்டி, penalty, fine என்று unnecessary charge பண்ணுவார்கள். அப்படி யாராவது இருந்தால், நான் clear-ஆ பேசித் தீர்வு கேட்டேன். சில சமயம் documentation கேள்விப்பட்டதும் அவர்களே குறைத்துவிடுவார்கள்.
என் அனுபவத்தின் இறுதி முடிவு
கடனிலிருந்து வெளியே வரு போது நம்மிடம் வேண்டியது:
- துணிவு
- control
- திட்டம்
- கொஞ்சம் கஷ்டத்தை தாங்கும் மனசு
நான் 1.5 ஆண்டில் எல்லா கடனும் முடித்து வெளியே வந்து விட்டேன்.
இப்போது ஒரு பாடம் மட்டும் புரிந்தது:
கடன் எடுப்பது எளிது. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமல் கடன் முடிக்க முடியாது. நீங்கள் கடனில் இருந்து விடுபட முடிவு எடுத்தால் நான் மேலே கூறியதை பின்பற்றுங்கள் விரைவில் அது சிறந்த மாற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தும்.

0 Comments